Tuesday, 27 March 2012

கண்ணார் கோயில்

கண்ணார் கோயில்... குறுமாணக்குடி ...

இந்த தலத்தை கண்ணார் கோவில் என்று கூறுவார்கள்.

தல இருப்பிடம்:

இந்த தலம் மாயவரம் வைத்தீஸ்வரன் கோவில் பாதையில் உள்ளது.இந்த சாலையில் பாகசாலை என்னும் கைகாட்டி  வரும்.இந்த பாதையில் வழி விசாரித்து செல்ல வேண்டும். பேருந்து கிடையாது. அன்பர்கள் சொந்த வாகனத்தில் செல்ல வேண்டும். செல்லும் வழி மழை காலங்களுக்கு ஏற்றதல்ல. ஆகையால் வழி விசாரித்து கொண்டு தான் செல்ல வேண்டும்.

தல அமைப்பு:

ஆலயத்திற்கு ராஜா கோபுரம் கிடையாது. கட்டை கோபுர வாசல் மட்டும் தான்.கட்டை கோபுரத்தில் ரிஷபாரூடர் சிற்பம், விநாயகர் சிற்பம் மற்றும் வள்ளி தேவசேனா உடனுறை முருக பெருமான் சிற்பமும் உள்ளது.உள்ளே நீண்ட கல் மண்டபம் உள்ளது. அனைத்தும் நகரத்தார் திருப்பணி. ஆலயத்திற்கு எதிரே இந்திர தீர்த்தம் உள்ளது. முழுவதும் கருங்கல் திருப்பணி.குளக்கரை விநாயகர் சன்னதி உள்ளது.

ஆலயத்தில் வெளி பிரகாரத்தில் சன்னதி ஏதும் இல்லை. அருகே கொடிமர விநாயகர் சன்னதி ,பலி பீடம் உள்ளது. கல் மண்டபம்  தாண்டியவுடன் செப்பு கவசமிட்ட கொடிமரம் உள்ளது.

உள் பிரகாரத்தில் அனைத்து பரிவார  மூர்த்திகளும் உள்ளனர். சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளனர். அம்பாள் சன்னதி அருகே மண்டப மேற்புறத்தில் ராசி கட்ட சிற்பம் உள்ளது. கண்டிப்பாக பாருங்கள்.

சுவாமி பெயர் : கண்ணாயிரநாதர்
அம்பாள் பெயர் : கோதைநாயகி, சுகந்த குந்தளாம்பிகை

பதிகம்: ஞானசம்பந்தர் பெருமான் - 1 

சிறப்பு: சுவாமி திருமேனியில் கண்கள் போன்ற அமைப்பு உள்ளது.

தல வரலாறு:

அகலிகை தான் கணவர் கௌதம முனிவரின்  சாபத்தால் கல்லாக மாறினாள்.மேலும் இந்திரனுக்கு உடல் முழுதும் பெண் குறிகள் உண்டாகும் படி சாபம் கொடுத்தார்,
பிரமனின் ஆணைப்படி இந்த தலத்திற்கு வந்து வழிபட்டு சபை விமோசனம் பெற்றான். பெண் குறிகள் கண்களாக மாறியது. ஆதலால் சுவாமி கண்ணாயிரநாதர் ஆனார்.

குறிப்புக்கள் :

மிகவும் அழகான ஆலயம் வெளி உலகத்திற்கு தெரியாமல் உள்ளது. கோவிலை அழகாக வைத்து உள்ளனர். வாசகர்கள் இந்த வழி செல்லும் போது இந்த ஆலயத்திற்கு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன். வைத்தீஸ்வரன் கோவில் செல்லும் வாசகர்கள் இந்த வழியாக செல்லும் போது இந்த ஆலயத்திற்கு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன்.







நண்பர்களுக்கு..

நண்பர்களுக்கு..

சில நாட்களாக பதிவுகள் எழுத முடியவில்லை.. மீண்டும் இந்த வாரம் முதல் பதிவுகள் தொடரும்...

நன்றி...

என்றும் இறைப்பணியில் ...
ஞானசம்பந்தன்