உள் ஒளிப் பயணம்
Monday, 22 April 2013
Wednesday, 26 December 2012
Saturday, 15 December 2012
தலையாலங்காடு
தலையாலங்காடு ..
நெடு நாட்களாக இந்த தலத்திற்கு செல்ல முயற்சி எடுத்து கொண்டு இருந்தேன். சென்ற மாதம் தான் செல்ல முடிந்தது.
இருப்பிடம் :
கும்பகோணம் திருவாரூர் பேருந்து பாதையில் அமைந்து உள்ளது. ஊர் பேரை விசாரித்து தான் செல்ல வேண்டும்.காப்பனமங்கலம் மாதா கோயில் (சர்ச் ) என்ற பேருந்து நிறுத்தம் அருகே ஆலயம் உள்ளது.சாலை ஓரத்தில் இருந்து ஊர் உள்ளடங்கி உள்ளது. இரண்டு வாய்க்கால் பாலங்களை தாண்டி ஊர் உள்ளது.கும்பகோணத்தில் இருந்து சுமாராக 25 கீ .மீ தூரத்தில் உள்ளது.
அமைப்பு :
காவிரி தென்கரை தலங்களில் 93 வது தலம்.கிழக்கு நோக்கிய தலம். கோயிலின் எதிரே சங்க தீர்த்தம் உள்ளது.கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை.நுழைவு வாயில் பஞ்ச மூர்த்திகளின் சிற்பங்களோடு உள்ளது.கோயில் உள்ளே சென்றால் கொடிமர விநாயகர் மற்றும் பலிபீடம், நந்தி ஆகியவற்றை தரிசிக்கலாம்.
காஞ்சி பெரியவர் இந்த ஊருக்கு அருகே உள்ள செம்பங்குடியில் தங்கி இந்த தீர்த்தத்தில் 48 நாள் ஸ்நானம் செய்து சுவாமியை தரிசனம் செய்து உள்ளார்.
ஸ்வாமி பெயர் : நர்த்தனபுரீஸ்வரர்
அம்பாள் பெயர்: பாலாம்பிகை (தெற்கு நோக்கிய அம்பாள் )
ஸ்வாமி சதுர ஆவுடையாரோடு காட்சி தருகிறார். முயலகன் மீது ஆடியதால் நர்த்தனபுரீஸ்வரர் என்றும் ஆடவல்லநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.அம்பாள் சன்னதி வாயில் அருகில் கிழக்கு நோக்கியபடி அனுக்ரஹ சனி பகவான் உள்ளார்.(இது திருநள்ளாரில் உள்ள அமைப்பு )
புராண வரலாறு
தாருகாவன முனிவர்கள் அபிசார வேள்வி செய்து ஏவிய முயலகனை அடக்கி சிவபெருமான் நடனம் ஆடிய தலம் இது .கபில முனிவர் இங்கு பூஜித்து தை அமாவாசை தினத்தில் சிந்தாமணியை பெற்றார். இங்கு உள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடுபவர்கள் குன்மம் , முயலகநோய் , வெண்குஷ்டம் முதலிய நோய்களில் இருந்து நிவர்த்தி பெறுகிறார்கள்
திருநாவுக்கரசு நாயனார் இந்த தல இறைவனை 10 பாடல்களால் பாடியுள்ளார் .
சிறப்பு :
ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் கடைசி இரு நாட்களும் சித்திரை மாத முதல் இரு நாட்களும் சூரியனின் ஒளி கதிர்கள் சுவாமியின் மீது விழும். இதுவே சூரிய பூஜை.
ராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் மகாமண்டப முகப்பில் உள்ளன.அம்பர் அருவந்தை அரயன் சிவதவன பெருமான் காளிங்க ராஜன் என்பவர் இங்கே திருப்பணி செய்து உள்ளதாக கல்வெட்டு உள்ளது.
தை அமாவாசை அன்று சங்க தீர்த்தத்தில் தீர்த்தவாரி உண்டு.
குடமுழுக்கு 8.7.2012 அன்று நடை பெற்றது.
குறிப்புகள்
இந்த தலம் ஒரு சிறு கிராமத்தில் உள்ளது.வசதிகள் குறைவு.கூட்டமும் குறைவு தான்.
பல கிராமத்து கோயில் நிலைமை தன இங்கும். வருமானம் மிகவும் குறைவு.இந்த நிலையில் நித்ய பூஜை செலவுகள் வேறு.கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கும்.மாத சம்பளம் ருபாய் நூறுக்கும் குறைவு . அதிலும் பல மாத பாக்கி.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இத்தகைய ஆலயங்களுக்கு ஆதரவு தர வேண்டியது நம் கடமை.நகரங்களில் உள்ள ஆலயங்களுக்கு நல்ல கூட்டம் வருவது போல் இங்கும் வர வேண்டும்.. இந்த வலை பூவின் எண்ணமும் அதுவே. பிரபலம் ஆகாத ஆலயங்களை பற்றி எழுதுவது.
நித்ய பூஜை செய்ய நிதி தேவை.
தொடர்பு கொள்ள:
கே.வைத்யநாதன் ,
திருத்தலையாலங்காடு ,
சிமிழி (போஸ்ட் ),
செம்மங்குடி (எஸ்.ஓ )
குடவாசல் (தாலுக்கா )
612603
K.Vaidyanathan,
Thiruthalaiyalangadu,
Simizhi (post),
Semmangudi(S.O),
Kudavasal (T.K)
612603
Bank Details:
Aadalvallan Arutpani mandram.
City Union Bank
Kodavasal,
IFSC: CIUB0000013
சிவாச்சாரியார் எண் : 9443500235
நன்றி:
சிவோஹம் சிவோஹம்
அன்புடன்
ஞானசம்பந்தன்
Tuesday, 21 August 2012
பொருணை நதிக்கரையில் ...
பொருணை நதிக்கரையில் ...
தென் தமிழ் நாட்டின் வற்றாத ஜீவ நதியான தாமிரவருணி / தாமிரபரணி நதி தீரத்தில் பல ஆலயங்களும் தீர்த்த கட்டங்களும் உள்ளன. இந்த இடங்களை பற்றிய குறிப்புகளை இந்த கட்டுரைகளில் காண்போம்.
இந்த நதி தீரத்தில் உள்ள முக்கியமான ஆலயங்கள்.
1. நவ கைலாயங்கள்
2. நவ திருப்பதி தலங்கள்
3. இதர பிரசித்தி பெற்ற தலங்கள்
தாமிரபரணி நதி பொதிகை மலையில் உற்பத்தியாகி பழையகாயல் அருகே கடலில் சங்கமம் ஆகிறது.தாமிரபரணி நதியின் பெருமைகளை பற்றி கூறும் நூல் தாமிரபரணி மகாத்மியம்.
இந்த நதியின் துணை ஆறுகள் .
கடனா நதி
மணிமுத்தாறு
சேர்வலாறு
சித்தாறு
காரையாறு
இந்த நதி தீரத்தில் நாங்கள் தரிசனம் செய்த பல்வேறு ஆலயங்களை பற்றி பதிவுகள் தொடரும்.
நாங்கள் தரிசனம் செய்த சில முக்கியமான தலங்கள்
Tuesday, 27 March 2012
கண்ணார் கோயில்
கண்ணார் கோயில்... குறுமாணக்குடி ...
இந்த தலத்தை கண்ணார் கோவில் என்று கூறுவார்கள்.
தல இருப்பிடம்:
இந்த தலம் மாயவரம் வைத்தீஸ்வரன் கோவில் பாதையில் உள்ளது.இந்த சாலையில் பாகசாலை என்னும் கைகாட்டி வரும்.இந்த பாதையில் வழி விசாரித்து செல்ல வேண்டும். பேருந்து கிடையாது. அன்பர்கள் சொந்த வாகனத்தில் செல்ல வேண்டும். செல்லும் வழி மழை காலங்களுக்கு ஏற்றதல்ல. ஆகையால் வழி விசாரித்து கொண்டு தான் செல்ல வேண்டும்.
தல அமைப்பு:
ஆலயத்திற்கு ராஜா கோபுரம் கிடையாது. கட்டை கோபுர வாசல் மட்டும் தான்.கட்டை கோபுரத்தில் ரிஷபாரூடர் சிற்பம், விநாயகர் சிற்பம் மற்றும் வள்ளி தேவசேனா உடனுறை முருக பெருமான் சிற்பமும் உள்ளது.உள்ளே நீண்ட கல் மண்டபம் உள்ளது. அனைத்தும் நகரத்தார் திருப்பணி. ஆலயத்திற்கு எதிரே இந்திர தீர்த்தம் உள்ளது. முழுவதும் கருங்கல் திருப்பணி.குளக்கரை விநாயகர் சன்னதி உள்ளது.
ஆலயத்தில் வெளி பிரகாரத்தில் சன்னதி ஏதும் இல்லை. அருகே கொடிமர விநாயகர் சன்னதி ,பலி பீடம் உள்ளது. கல் மண்டபம் தாண்டியவுடன் செப்பு கவசமிட்ட கொடிமரம் உள்ளது.
உள் பிரகாரத்தில் அனைத்து பரிவார மூர்த்திகளும் உள்ளனர். சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளனர். அம்பாள் சன்னதி அருகே மண்டப மேற்புறத்தில் ராசி கட்ட சிற்பம் உள்ளது. கண்டிப்பாக பாருங்கள்.
சுவாமி பெயர் : கண்ணாயிரநாதர்
அம்பாள் பெயர் : கோதைநாயகி, சுகந்த குந்தளாம்பிகை
பதிகம்: ஞானசம்பந்தர் பெருமான் - 1
சிறப்பு: சுவாமி திருமேனியில் கண்கள் போன்ற அமைப்பு உள்ளது.
தல வரலாறு:
அகலிகை தான் கணவர் கௌதம முனிவரின் சாபத்தால் கல்லாக மாறினாள்.மேலும் இந்திரனுக்கு உடல் முழுதும் பெண் குறிகள் உண்டாகும் படி சாபம் கொடுத்தார்,
பிரமனின் ஆணைப்படி இந்த தலத்திற்கு வந்து வழிபட்டு சபை விமோசனம் பெற்றான். பெண் குறிகள் கண்களாக மாறியது. ஆதலால் சுவாமி கண்ணாயிரநாதர் ஆனார்.
குறிப்புக்கள் :
மிகவும் அழகான ஆலயம் வெளி உலகத்திற்கு தெரியாமல் உள்ளது. கோவிலை அழகாக வைத்து உள்ளனர். வாசகர்கள் இந்த வழி செல்லும் போது இந்த ஆலயத்திற்கு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன். வைத்தீஸ்வரன் கோவில் செல்லும் வாசகர்கள் இந்த வழியாக செல்லும் போது இந்த ஆலயத்திற்கு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன்.
நண்பர்களுக்கு..
நண்பர்களுக்கு..
சில நாட்களாக பதிவுகள் எழுத முடியவில்லை.. மீண்டும் இந்த வாரம் முதல் பதிவுகள் தொடரும்...
நன்றி...
என்றும் இறைப்பணியில் ...
ஞானசம்பந்தன்
சில நாட்களாக பதிவுகள் எழுத முடியவில்லை.. மீண்டும் இந்த வாரம் முதல் பதிவுகள் தொடரும்...
நன்றி...
என்றும் இறைப்பணியில் ...
ஞானசம்பந்தன்
Wednesday, 9 November 2011
திருக்கண்டீஸ்வரம்
திருக்கண்டீஸ்வரம்..... வேறு பெயர்கள்...
திருக்கொண்டீச்வரம் ..
இருப்பிடம்:
நன்னிலத்திற்கு வெகு அருகில் அமைந்துள்ளது. நன்னிலத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் நாகப்பட்டினம் சாலையில் அமைந்து உள்ளது. சாலை ஓரத்தில் கோயில் பெயர் பலகை உள்ளது.நாகப்பட்டினம் சாலையில் தூத்துக்குடி பேருந்து நிறுத்தம் என்று கேட்க வேண்டும்.
இறைவன் பெயர்: பசுபதீஸ்வரர்
இறைவி பெயர்: சாந்த நாயகி
தேவார பாடல்கள்: திருநாவுக்கரசர் - 2
தலச்சிறப்பு:
சிறிய ஆலயம். ஊரும் ஒரு சிறிய கிராமம். ராஜகோபுரம் மற்றும் கொடிமரம் கிடையாது. முகப்பு வாயில் மட்டுமே. கோவில் அகழியால் சூழ பட்டு உள்ளது. இந்த அகழியே க்ஷீர தீர்த்தம்.
மஹா மண்டபத்தில் இந்த கோயிலின் தல வரலாறு படங்கள் உள்ளன.
தல வரலாறு:
அம்பாள் சிவனாரின் சாபத்தால் பூமியில் பசுவாக பிறக்கிறாள். பசு ரூபத்தில் உள்ள அம்பாள் பூமியை தோண்டிய பொது அங்கே இருந்த சிவலிங்கத்தை கொம்பு இரண்டாக கிழித்து விட்டது.கொம்பு கிழித்த இடத்தில ரத்தம் வர ஆரம்பித்தது. காமதேனு வடிவில் இருந்த அம்பிகை பாலை சொரிந்து சுவாமியை வழிபட்டாள். மேலும் சபை விமோசனம் பெற்றாள். கொம்பு கிழித்தால் லிங்கத்தின் மேல் ஒரு பிளவு உள்ளது.
சிறப்பு: மண்டப தூணில் ஜுரதேவர் சிற்பம் உள்ளது. ஜுரம் உள்ளவர்கள் இவரை வழிபடுவர். இவருக்கு வெந்நீர் அபிஷேகமும் மற்றும் மிளகு ரசம் நிவேதனம் பிரசித்தம்.
குறிப்பு:
ஆலயம் முடிகொண்டான் ஆற்றிற்கு அக்கரையில் உள்ளது. பாலம் கட்டப்பட்டு வருகிறது. எனவே மூங்கில் பாலத்தின் துணை கொண்டு
தான் செல்ல வேண்டும். மூங்கில் பாலத்தின் மீது வண்டி செல்லாது.
நடந்து தான் செல்ல வேண்டும்.பாலத்தின் அக்கரையில் வண்டியை
நிறுத்தி விட்டு பாலத்தின் மீது நடந்து செல்ல வேண்டும். இல்லை
என்றால் சுற்று பாதையில் வழி விசாரித்து வண்டியில் செல்ல வேண்டும்.
அர்ச்சகர் பெயர்: கைலாச குருக்கள்.
தொலை பேசி: 04366 -314871 ,94430 38854
புகைப்படங்கள்:
தல வரலாறு ஓவியம்

மூங்கில் பாலம்
பெயர் பலகை
Subscribe to:
Posts (Atom)