தலையாலங்காடு ..
நெடு நாட்களாக இந்த தலத்திற்கு செல்ல முயற்சி எடுத்து கொண்டு இருந்தேன். சென்ற மாதம் தான் செல்ல முடிந்தது.
இருப்பிடம் :
கும்பகோணம் திருவாரூர் பேருந்து பாதையில் அமைந்து உள்ளது. ஊர் பேரை விசாரித்து தான் செல்ல வேண்டும்.காப்பனமங்கலம் மாதா கோயில் (சர்ச் ) என்ற பேருந்து நிறுத்தம் அருகே ஆலயம் உள்ளது.சாலை ஓரத்தில் இருந்து ஊர் உள்ளடங்கி உள்ளது. இரண்டு வாய்க்கால் பாலங்களை தாண்டி ஊர் உள்ளது.கும்பகோணத்தில் இருந்து சுமாராக 25 கீ .மீ தூரத்தில் உள்ளது.
அமைப்பு :
காவிரி தென்கரை தலங்களில் 93 வது தலம்.கிழக்கு நோக்கிய தலம். கோயிலின் எதிரே சங்க தீர்த்தம் உள்ளது.கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை.நுழைவு வாயில் பஞ்ச மூர்த்திகளின் சிற்பங்களோடு உள்ளது.கோயில் உள்ளே சென்றால் கொடிமர விநாயகர் மற்றும் பலிபீடம், நந்தி ஆகியவற்றை தரிசிக்கலாம்.
காஞ்சி பெரியவர் இந்த ஊருக்கு அருகே உள்ள செம்பங்குடியில் தங்கி இந்த தீர்த்தத்தில் 48 நாள் ஸ்நானம் செய்து சுவாமியை தரிசனம் செய்து உள்ளார்.
ஸ்வாமி பெயர் : நர்த்தனபுரீஸ்வரர்
அம்பாள் பெயர்: பாலாம்பிகை (தெற்கு நோக்கிய அம்பாள் )
ஸ்வாமி சதுர ஆவுடையாரோடு காட்சி தருகிறார். முயலகன் மீது ஆடியதால் நர்த்தனபுரீஸ்வரர் என்றும் ஆடவல்லநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.அம்பாள் சன்னதி வாயில் அருகில் கிழக்கு நோக்கியபடி அனுக்ரஹ சனி பகவான் உள்ளார்.(இது திருநள்ளாரில் உள்ள அமைப்பு )
புராண வரலாறு
தாருகாவன முனிவர்கள் அபிசார வேள்வி செய்து ஏவிய முயலகனை அடக்கி சிவபெருமான் நடனம் ஆடிய தலம் இது .கபில முனிவர் இங்கு பூஜித்து தை அமாவாசை தினத்தில் சிந்தாமணியை பெற்றார். இங்கு உள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடுபவர்கள் குன்மம் , முயலகநோய் , வெண்குஷ்டம் முதலிய நோய்களில் இருந்து நிவர்த்தி பெறுகிறார்கள்
திருநாவுக்கரசு நாயனார் இந்த தல இறைவனை 10 பாடல்களால் பாடியுள்ளார் .
சிறப்பு :
ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் கடைசி இரு நாட்களும் சித்திரை மாத முதல் இரு நாட்களும் சூரியனின் ஒளி கதிர்கள் சுவாமியின் மீது விழும். இதுவே சூரிய பூஜை.
ராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் மகாமண்டப முகப்பில் உள்ளன.அம்பர் அருவந்தை அரயன் சிவதவன பெருமான் காளிங்க ராஜன் என்பவர் இங்கே திருப்பணி செய்து உள்ளதாக கல்வெட்டு உள்ளது.
தை அமாவாசை அன்று சங்க தீர்த்தத்தில் தீர்த்தவாரி உண்டு.
குடமுழுக்கு 8.7.2012 அன்று நடை பெற்றது.
குறிப்புகள்
இந்த தலம் ஒரு சிறு கிராமத்தில் உள்ளது.வசதிகள் குறைவு.கூட்டமும் குறைவு தான்.
பல கிராமத்து கோயில் நிலைமை தன இங்கும். வருமானம் மிகவும் குறைவு.இந்த நிலையில் நித்ய பூஜை செலவுகள் வேறு.கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கும்.மாத சம்பளம் ருபாய் நூறுக்கும் குறைவு . அதிலும் பல மாத பாக்கி.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இத்தகைய ஆலயங்களுக்கு ஆதரவு தர வேண்டியது நம் கடமை.நகரங்களில் உள்ள ஆலயங்களுக்கு நல்ல கூட்டம் வருவது போல் இங்கும் வர வேண்டும்.. இந்த வலை பூவின் எண்ணமும் அதுவே. பிரபலம் ஆகாத ஆலயங்களை பற்றி எழுதுவது.
நித்ய பூஜை செய்ய நிதி தேவை.
தொடர்பு கொள்ள:
கே.வைத்யநாதன் ,
திருத்தலையாலங்காடு ,
சிமிழி (போஸ்ட் ),
செம்மங்குடி (எஸ்.ஓ )
குடவாசல் (தாலுக்கா )
612603
K.Vaidyanathan,
Thiruthalaiyalangadu,
Simizhi (post),
Semmangudi(S.O),
Kudavasal (T.K)
612603
Bank Details:
Aadalvallan Arutpani mandram.
City Union Bank
Kodavasal,
IFSC: CIUB0000013
சிவாச்சாரியார் எண் : 9443500235
நன்றி:
சிவோஹம் சிவோஹம்
அன்புடன்
ஞானசம்பந்தன்
No comments:
Post a Comment