Wednesday 9 November 2011

திருக்கண்டீஸ்வரம்

திருக்கண்டீஸ்வரம்..... வேறு பெயர்கள்...
திருக்கொண்டீச்வரம் ..

இருப்பிடம்:

நன்னிலத்திற்கு வெகு அருகில் அமைந்துள்ளது. நன்னிலத்தில் இருந்து 3  கி.மீ தூரத்தில் நாகப்பட்டினம் சாலையில் அமைந்து உள்ளது. சாலை ஓரத்தில் கோயில் பெயர் பலகை உள்ளது.நாகப்பட்டினம் சாலையில் தூத்துக்குடி பேருந்து நிறுத்தம் என்று கேட்க வேண்டும்.


இறைவன் பெயர்: பசுபதீஸ்வரர்
இறைவி பெயர்: சாந்த நாயகி

தேவார பாடல்கள்: திருநாவுக்கரசர் - 2 


தலச்சிறப்பு:

சிறிய ஆலயம். ஊரும் ஒரு சிறிய கிராமம். ராஜகோபுரம் மற்றும் கொடிமரம் கிடையாது. முகப்பு வாயில் மட்டுமே. கோவில் அகழியால் சூழ பட்டு உள்ளது. இந்த அகழியே க்ஷீர தீர்த்தம்.
மஹா மண்டபத்தில் இந்த கோயிலின் தல வரலாறு படங்கள் உள்ளன.

தல வரலாறு:

அம்பாள் சிவனாரின் சாபத்தால் பூமியில் பசுவாக பிறக்கிறாள். பசு ரூபத்தில் உள்ள அம்பாள் பூமியை தோண்டிய பொது அங்கே இருந்த சிவலிங்கத்தை கொம்பு இரண்டாக கிழித்து விட்டது.கொம்பு கிழித்த இடத்தில ரத்தம் வர ஆரம்பித்தது. காமதேனு வடிவில் இருந்த அம்பிகை பாலை சொரிந்து சுவாமியை வழிபட்டாள். மேலும் சபை விமோசனம் பெற்றாள். கொம்பு கிழித்தால் லிங்கத்தின் மேல் ஒரு பிளவு உள்ளது.

சிறப்பு: மண்டப தூணில் ஜுரதேவர் சிற்பம் உள்ளது. ஜுரம் உள்ளவர்கள் இவரை வழிபடுவர். இவருக்கு வெந்நீர் அபிஷேகமும் மற்றும் மிளகு ரசம் நிவேதனம் பிரசித்தம்.

குறிப்பு:

ஆலயம் முடிகொண்டான் ஆற்றிற்கு அக்கரையில் உள்ளது. பாலம் கட்டப்பட்டு வருகிறது. எனவே மூங்கில் பாலத்தின் துணை கொண்டு
தான் செல்ல வேண்டும். மூங்கில் பாலத்தின் மீது வண்டி செல்லாது.
நடந்து தான் செல்ல வேண்டும்.பாலத்தின் அக்கரையில் வண்டியை
நிறுத்தி  விட்டு பாலத்தின் மீது நடந்து செல்ல வேண்டும். இல்லை
என்றால் சுற்று பாதையில் வழி விசாரித்து வண்டியில் செல்ல வேண்டும்.

அர்ச்சகர் பெயர்: கைலாச குருக்கள்.
தொலை பேசி: 04366 -314871 ,94430  38854 

புகைப்படங்கள்:

                                                        தல வரலாறு ஓவியம்





 






மூங்கில் பாலம்







பெயர் பலகை