கோழ்குத்தி...
மயிலாடுதுறை பக்கம் உள்ள அழகான கிராமம்.வேறு பெயர்கள் : கோடிஹத்தி. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. இந்த வாக்கியம் வாமன அவதாரத்தை பற்றி கூறியது.ஆனால் இந்த தலத்தில் மூர்த்தி மிகவும் பெரியவர்.
அத்தி மரத்திலான 14 அடி மூர்த்தி இவர்.
சுவாமி : ஸ்ரீ வானமுட்டி பெருமாள்
தாயார்: மூலவரின் மார்பில் ஸ்ரீ தயாலக்ஷ்மி . பூமா தேவி சில ரூபம்.
உத்சவர்: ஸ்ரீ தேவி பூமி தேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள்
சுவாமி : ஸ்ரீ வானமுட்டி பெருமாள்
தாயார்: மூலவரின் மார்பில் ஸ்ரீ தயாலக்ஷ்மி . பூமா தேவி சில ரூபம்.
உத்சவர்: ஸ்ரீ தேவி பூமி தேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள்
இடம்:
மயிலாடுதுறை கும்பகோணம் பேருந்து சாலையில் உள்ளது மூவலூர்.இந்த மூவலூரில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது கோழ்குத்தி.மூவலூர் ஆலயத்தில் இருந்து பாதை செல்கிறது.
சிறப்பு:
இங்கிருக்கும் மூலவர் அத்தி மரத்திலான 14 அடி மூர்த்தி இவர்.சங்கு சக்ரம், கதை மற்றும் அபய ஹஸ்த முத்திரையோடு கட்சி தருகிறார். சிறிய ஆலயம்.
மூன்று நிலை ராஜகோபுரம். ஒரே பிரகாரம். சமீபத்தில் குடமுழுக்கு செய்யப்பட்டது.ஆலயத்திற்கு எதிரே திருக்குளம்.விஸ்வரூப புஷ்கரணி.
சிறப்பு வாய்ந்த ஹனுமான் சன்னதி. வாலில் மணியோடு காட்சி தருகிறார்.இவர் சப்தஸ்வர ஆஞ்சநேயர். இசை வல்லுனர்கள் இந்த பெருமானை தரிசனம் செய்வர்.
தல வரலாறு:
பிப்பல மகரிஷியின் தொழுநோயை தீர்த்தவர் இந்த பெருமாள். சோழ மன்னன் ஒருவன் தன பாவங்களை போக்க 48 நாள் இந்த கோயிலின் தீர்த்தத்தில் நீராடி பெருமானை தரிசனம் செய்தான். இந்த அரசனுக்கு பெருமாள் அத்தி மரத்தில் காட்சி கொடுத்தார்.வேரே திருவடியை தங்கி நிற்கிறது.
குறிப்புக்கள்:
* ஆலயம் ஒரு சிறு கிராமத்தில் உள்ளது. வசதிகள் குறைவு தான்.
* ஆனால் இப்போது பிரபலம் ஆகி உள்ளது. சனி கிழமைகளில் கூட்டம் வருகிறது.
கோவில் நேரம்:
சனி : 07 -12 .௦௦ 04 .௦௦ - 08 .௦௦
08 -12 .௦௦ 04 .3௦ - 08 .௦௦
பட்டர் அலைபேசி: 97872 13226
மூலவர் படம்:
நன்றி : http://www.vanamuttiperumaltemple.org
* ஆனால் இப்போது பிரபலம் ஆகி உள்ளது. சனி கிழமைகளில் கூட்டம் வருகிறது.
கோவில் நேரம்:
சனி : 07 -12 .௦௦ 04 .௦௦ - 08 .௦௦
08 -12 .௦௦ 04 .3௦ - 08 .௦௦
பட்டர் அலைபேசி: 97872 13226
மூலவர் படம்:
மூலவர்
No comments:
Post a Comment