சப்தஸ்தானம்....
திருவையாறு சப்தஸ்தான யாத்திரை பற்றி பதிவுகளை தொடங்குகிறேன்.
சப்தஸ்தானம் - 7 தலங்கள். திருவையாறில் தொடங்கி திருபழனம்,திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, கண்டியூர்,
தில்லைஸ்தானம், திருபூந்துருத்தி போன்ற தலங்களை
தரிசனம் செய்வது.
இந்த தலங்களை ஒரே நாளில் திருவையாறை மையமாக
கொண்டு தரிசனம் செய்யலாம்.
ராஜராஜ சோழனின் பட்டத்துஅரசி லோகமாதேவி அவர்களால் தொடங்கப்பட்டது தான் சப்தஸ்தான திருவிழா. சிலாத மகரிஷியின் புதல்வர் ஜப்பேசனின் திருமண விழாதான் இந்த சப்தஸ்தான
விழாவாக நடைபெறுகிறது.
ஐயாறப்பரும், தர்மசம்வர்த்தினி அம்மையும், திருமண தம்பதியரோடு பல்லக்கில் ஏழு ஊர் செல்வது இந்த விழாவின் சிறப்புஅம்சம்.
திருவையாறு வட்டத்தின் பரபலமா திருவிழாக்களில் இதுவும் ஒன்று.
இந்த தளங்கள் அனைத்தும் காவேரி ஆற்றின் இரு கரைகளில் அமைந்துள்ளன.
குறிப்புகள்:
1 .தலங்கள் அனைத்தும் கண்டியூர், திருவையாறு நீங்கலாக சிறு கிராமங்களில் அமைந்துள்ளன.
2 .சாலை வசதிகள் சுமார் தான்.மழை காலங்களில் தஞ்சை பகுதி சாலைகள் பயணம் செய்வதற்கு வசதியாக இருக்காது.
3 .உணவு வசதிகள் திருவையாறில் மட்டுமே உள்ளன. அதுவும் சிறு
உணவகங்கள் மட்டுமே.தங்கும் வசதிகளும் தஞ்சையில் மட்டும் தான். வெளியூர் நண்பர்கள் தஞ்சாவூரில் தங்கி கொண்டு இந்த இடங்களை தரிசனம் செய்யலாம்.
4 . காவேரி ஆற்றில் நீர் வரத்து இருக்கும் போது இந்த இடங்களுக்கு பிரயாணம் செய்வது மிக அருமையானது. நான் ஆடி பெருக்கிற்கு பின்பு பிரயாணம் செய்த போது அணைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்து இருந்தது.
5 . தலங்கள் சிறு கிராமங்களில் இருப்பதால் திருவிழா காலங்களில் மட்டுமே நல்ல கூட்டம் இருக்கும். மற்ற நாட்களில் ஆலய தரிசன நேரம் தெரிந்து தரிசனம் செய்யலாம்.
6 . இனிப்பு பிரியர்களுக்கு.... திருவையாறு ஆண்டவர் அசோகா கடை..
திருவையாறு ஆலயத்திற்கு அருகில் உள்ளது (ஆட்கொண்டார் சன்னதி அருகில்).. இந்த கடையில் அசோகா அல்வா மிகவும் பிரபலம்.திருவையாறு செல்பவர்கள் ஒரு கை பார்க்கலாம்.... மன்னிக்கவும்...ஒரு வாய் அல்வா சுவைக்கலாம்.
இனி வரும் பதிவுகளில் இந்த தலங்களை பார்க்கலாம்..........
No comments:
Post a Comment