Sunday 4 September 2011

பெரும்புலியூர்

பெரும்புலியூர் ...

வித்தியாசமான அனுபவம். எங்கள் பயணத்தில் இந்த தலம் இடம் பெற வில்லை. சப்தஸ்தானம் வரிசையில் தில்லைஸ்தானம் ஆலயத்தை பார்த்து விட்டு அங்கேயே அமர்ந்து கொண்டோம். தில்லைஸ்தானம் அர்ச்சகரிடம் பேச்சு கொடுத்தோம்,சுற்றுப்புற ஆலயங்களை பற்றி. பேச்சின் ஊடே அவரே கூறினார்.தான் பெரும்புலியூர் ஆலய அர்ச்சகர் என்று.

நாங்கள் வந்த காரணங்களை கேட்டு கொண்டார்.பிறகு எங்களுடன் வர சம்மதித்தார்.

வழி: 

தில்லைஸ்தானம் ஆலயத்தில் இருந்து இங்கு செல்லலாம்.சரியான வழி கிடையாது.மிகவும் சிறிய கிராமம்.திருவையாறு கல்லணை திருக்காட்டுப்பள்ளி சாலை தில்லைஸ்தானதிற்கு வலப்புறம் பிரியும் சாலையில் 4 கி.மீ தூரத்தில் பெரும்புலியூர்.

ஊர் சிறப்பு: 

சுந்தரராஜ பெருமாள் ஆலயம் புகழ் பெற்றது. சிவாலயத்திற்கு கூட்டம் இல்லை.

தல சிறப்பு

இறைவன் பெயர்: வியாக்ரபுரீஸ்வரர்
இறைவி பெயர்: சௌந்தர நாயகி 

ஞானசம்பந்தர் - 1 பாடல்.

பெரிய கோயில் விமானம்,ஆவுடையர்கோயில் கொடுங்கை வரிசையில் பெரும்புலியூர் கமல பீடமும் ஒன்று. ஆனால் பெரும்புலியூர் ஒரு சிறு கிராமமாக உள்ளதால் கூட்டம் இல்லை

தல வரலாறு: 

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்ட தலம். வியாக்ரபாதர் வழிபட்ட
ஏனய தலங்கள் சிதம்பரம்,ஓமாம் புலியூர், எருக்கம் புலியூர் ஆகும்.சிவபெருமானை வழிபட்டு புலி கால்களை பெற்றார்.வியக்ரம் என்றால் வடமொழியில் புலி என்று பொருள். நடராஜ பெருமானுக்கு இரு பக்கமும் இருப்பவர்கள் வியாக்ராபாதரும், பதஞ்சலி முனிவரும். 

வேறு தகவல் ஏதும் பெற முடியவில்லை.

குறிப்புகள்: 


அ. ஆலயம் ஒரு சிறு கிராமத்தில் அமைந்து உள்ளது. ஆலயத்திற்கு அருகில் வீடுகள் மற்றும் கடைகள் இல்லை.பேருந்து வசதி கிடையாது.

ஆ. ஆலய அர்ச்சகர் சதாசிவ குருக்கள் தில்லைஸ்தானம் ஆலயத்திற்கு அருகில் உள்ளார். தரிசனம் செய்ய வருபவர்கள் அவரை அழைத்து செல்ல வேண்டும்.


இ.     கோவிலில் கூட்டம் இல்லாததால் எல்லா நேரமும் கோவில் திறந்து இருக்காது. திருச்சி மலைகோட்டை தாயுமானவர் மன்றம் இக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்து உள்ளது.

ஈ. ஆகவே கோவிலுக்கு செல்பவர்கள் அர்ச்சகருக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டு செல்வது நல்லது.மேலும் எண்ணெய், திரி, பூ போன்றவற்றை எடுத்து செல்லவும்.

அர்ச்சகர் முகவரி:

சதாசிவ குருக்கள்,
அக்கிறஹாரம்,
தில்லைஸ்தானம் அஞ்சல்,
திருவையாறு (வழி),
தஞ்சை மாவட்டம்.



No comments:

Post a Comment