Saturday 8 October 2011

சீயாத்தமங்கை

நாயன்மார்கள்  வரிசையில் அடுத்து நாம் பார்க்க இருப்பது திருநீலநக்க நாயனார்.

ஊரின் பெயர்: திருச்சாத்தமங்கை அல்லது சீயாத்தமங்கை

இருப்பிடம்:

இந்த தலம் நன்னிலம்-திருமருகல்-நாகூர் சாலையில் உள்ளது.
திருமருகலில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் 1கி.மீ தூரத்தில்
 கோயில் சீயதமங்கை என்னும் வழிகாட்டி உள்ளது. அது கட்டும் 
பாதையில் சென்றால் ஆலயத்தை அடையலாம்.    நாகப்பட்டினம் நகரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ளது.நாகை கும்பகோணம் வழி,
நாகை  சன்னாநல்லூர் நடுவே அமைந்து உள்ளது. கோயில்
வரை நல்ல சாலை.

இறைவன் பெயர்: அயவந்தீஸ்வரர்,பிரம்மபுரீஸ்வர்
இறைவி பெயர் : மலர்க்கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி

பாடல்: திருஞானசம்பந்தர் - 1 . பாடல் பெற்ற தலம் மற்றும் வைப்பு தலமும் கூட...
.

ஆலய அமைப்பு:

ஆலயத்தின் பெயர் அயவந்தி. சுவாமி மற்றும் அம்பாள் தனி தனி ஆலயங்களில் உள்ளனர்.அருமையான கருங்கல் திருப்பணி. நாட்டுக்கோட்டை நகரத்தார் திருப்பணி செய்தது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு தனி தனி கோபுரங்கள். நேர் தரிசனம். சுவாமிக்கு ஐந்து நிலை ராஜகோபுரம்.

விசாலமான பிரகாரம். உட்ப்ரகரத்தில் திருநீலநக்க நாயனார் மற்றும் அவரது மனைவி சிலை உள்ளது.வெளிசுற்றில் பரிவார தெய்வங்கள் உள்ளனர்.அம்பாள் சன்னதி தனி கோயிலாக மதில்களுடன்,கோபுரங்களுடன் அமைந்து உள்ளது.அம்பாள் விநாயகர்,முருகன் ஆகியோரை துவரபாலர்களாக கொண்டு உள்ளார்.

சுவாமி பெயர்: அயவந்தீஸ்வரர்,பிரம்மபுரீஸ்வரர்
அம்பாள் பெயர்: மலர்க்கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி

சிறப்பு : திருநீலநக்க நாயன்மார் அவதார தலம்

நாயன்மார் வரலாறு:  திருநீலநக்கர் அந்தண குலத்தவர். தினமும் ஆலயத்தில் சிவா பூஜை செய்பவர். ஒரு நாள் மனைவியுடன் அவர் ஆலயத்திற்கு சென்றார். அப்போது சுவாமியின் மேல் சிலந்திவலை ஒன்றை கந்தர். நாயனாரின் மனைவி அதை வாயால் ஊதினார்.சுவாமி மேல் எச்சில் பட்டதாக நாயன்மார் கோவம் கொண்டார்.மனைவியை பிரிந்தார். சுவாமி அவரது கனவில் தோன்றி எச்சில் படாத இடங்களில் கொப்பளம் உள்ளதை காண்பித்தார்.தவறை உணர்ந்த நாயனார் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தார். ஆதலால் சுவாமி சிலை மேல் இன்றும் கொப்பளங்களை காணலாம்.

குறிப்புக்கள்:

1 . மிகவும் அழகான ஆலயம். பெரிய திருக்குளம் உள்ளது. சமீபத்தில் குடமுழுக்கு நடந்துள்ளது.
2 . அர்ச்சகர் ஆலயத்திற்கு வெகு அருகில் உள்ளார்.
3 . அம்பாளை பௌர்ணமி அன்று தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு.

அர்ச்சகர் பெயர்: முத்துகுமாரசுவாமி குருக்கள்
அலைபேசி எண்: 04366 - 270073 , 9842471582 






No comments:

Post a Comment