Wednesday 26 October 2011

தலைஞாயிறு

தலைஞாயிறு.. 

வேறு பெயர்கள்: திருகருப்பறியலூர்,மேலைக்காழி ...இப்படி கேட்டால் யாருக்கும் தெரியாது. தலைஞாயிறு என்று சொன்னால் தான் தெரியும். 

ஆலயங்களில் இது கொகுடி கோயில்..
ஆலய அமைப்புகளில் பல வகைகள் உண்டு.தூங்கானை மாடம்,மாட கோயில்..

கொகுடி என்பது ஒரு வகை முல்லை.  இந்த வடிவில் அமைந்தது இந்த கோயில்.
சீர்காழிக்கு மேற்கில் இருப்பதால் இது மேலைக்காழி.

இருப்பிடம்: 

வைத்தீஸ்வரன்கோவில் - திருப்பனந்தாள் சாலையில் தலைஞாயிறு என்னும் கைகாட்டி உள்ள இடத்தில் செல்ல வேண்டும்.  தலைஞாயிறு சர்க்கரை ஆலை அருகில் உள்ள சாலையில் செல்ல வேண்டும். ஊர் இந்த ஆலைக்கு பின்புறம் உள்ளது. கோவில் ஊரின் நடுவே உள்ளது. ஆங்காங்கே வழி விசாரித்து செல்ல வேண்டும்.

இரண்டாவது வழி : மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில்  பட்டவர்த்தி என்னும் ஊரில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது.  


இறைவன் பெயர்: அபராத க்ஷமேஸ்வரர் , குற்றம் பொறுத்த நாதர். 
இறைவி பெயர்: கோல் வளை நாயகி , விசித்திர பாலாம்பிகா
தலமரம் : கொகுடி முல்லை 
தீர்த்தம்: இந்திர தீர்த்தம்
பாடல்: சம்பந்தர், சுந்தரர் 
தருமை ஆதீன திருக்கோயில்
தல அமைப்பு: 

மூன்று நிலை ராஜகோபுரம். கிழக்கு நோக்கிய சன்னதி . பிரகாரத்தில் சீர்காழி கோவில் போன்ற கட்டுமலை அமைப்பு உள்ளது. மிகவும் அபூர்வமான அமைப்பு. ஆனால் மிகவும் பாழடைந்து உள்ளது.திருப்பணி செய்ய வேண்டியது 
மிகவும் அவசியம்.

பிரகாரத்தில் தல விருட்சமான முல்லை செடி உள்ளது.கட்டுமலை கோவில் உள்ளே சென்றால் தோணியப்பர் சன்னதி உள்ளது. மர படியேறி மேல சென்றால் சட்டநாதர் சன்னதியை தரிசிக்கிலாம்.

தல வரலாறு:

இந்திரன் தன் வச்சிரஆயுதத்தை இறைவன் மேல் எறிந்ததால் ஏற்பட்ட பாவத்தை இங்கே போக்கி கொண்டான். இறைவன் இந்திரனின் குற்றத்தை பொருத்து அருளியதால் இவர் குற்றம் பொறுத்த நாதர். அனுமன் சிவா அபராதத்தை இங்கே வழிபாடு செய்து போக்கி கொண்டார்.இதே வரலாறு
திருகுரக்காவல் தலத்திற்கும் உண்டு.

மேலும் பல வரலாறுகள் இந்த தலத்திற்கு உண்டு.

ஆலயம் நேரம்:

காலை: 08 .00 - 12 .00 
மாலை: 06 .00  - 08 .00 

தொடர்புக்கு:
என். வெங்கடேச குருக்கள்
04364 - 203678 
94431  90169 


படங்கள் தனி பதிவில்:


  


2 comments:

  1. Detailed post. Thanks. It's supposed to end the birth death cycle.

    ReplyDelete
  2. Detailed post. Thanks. It's supposed to end the birth death cycle.

    ReplyDelete