Sunday 9 October 2011

திருக்குரக்காவல்

திருக்குரக்குக்கா....

 தேவார வடகரை ஸ்தலங்களில் ஒன்று. ஊர் பெயர் வித்தியாசமானது.தற்போதைய பெயர்  திருக்குரக்காவல் 

இருப்பிடம்: 

இந்த தலம் வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் "இளந்தோப்பு" என்ற ஊரை அடைந்து, ஊரிலுள்ள மருத்துவமனைக் கட்டிடத்திற்குப் பக்கத்தில் செல்லும் திருக்குரக்காவல் சாலையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் 
கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும்

இறைவன் பெயர்: குந்தளநாதர்

இறைவி பெயர்: குந்தளநாயகி

பதிகம் : திருநாவுக்கரசர் - ௧

சிறப்பு: அனுமன் சன்னதி இங்கு சிறப்பானது.

ஆலய அமைப்பு:

ஆலயத்திற்கு கோபுரம் இல்லை. முகப்பு வாயில் மட்டுமே. கொடிமரம் கிடையாது. பலி பீடம் மற்றும் நந்தி மட்டுமே. வெளி பிரகாரத்தில் அனுமன் சன்னதி உள்ளது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளனர். சுவாமி சன்னதிக்கு அம்பாள் வலப்புறம் உள்ளார். தல புராண 
ஓவியம் உள்ளது.  வெளி பிரகாரத்தில் முருகன் சன்னதி உள்ளது.
வெளி பிரகாரத்தில் வாழை மரம் உள்ளது. இதுவே தல விருட்சம்.

தல வரலாறு:

ராமேஸ்வரம் கோயிலின் கிளை கதைதான். சீதை மணலால் லிங்கம் அமைத்து பூஜை செய்தாள். அனுமன் காசி நகரிலிருந்து லிங்கம் கொண்டு வந்தார். இரண்டு லிங்கங்களும் ராமேஸ்வரத்தில் உள்ளன. ஆனால் அனுமன் சீதை கொண்டு வந்த லிங்கத்தை தன வாலால் எடுக்க முயன்றார்.

இந்த செய்கை பாவ செயல் ஆதலால் இந்த தலத்திற்கு வந்து சிவா பூஜை செய்தார்.

சிறப்பு:

சிவாலயத்தில் இங்கு அனுமன் சன்னதி மிகவும் சிறப்பு. அமாவாசை தோறும் யாகம் உண்டு. சித்திரை மதத்தில் இரண்டு குரங்குகள் சுவாமி மேல் வில்வ இலைகளை தூவி வழிபடும். 

குறிப்புகள்:

அ. மிகவும் சிறிய கிராமம். நித்திய பூஜைகள் மட்டுமே. திருவிழாக்கள் ஏதும் கிடையாது.

ஆ. தேவைப்படும் பூஜை பொருட்களை வரும் போதே வாங்கி வரவும்.

இ. ஆலய அர்ச்சகர் : ஆபத்சகாய குருக்கள். 04364 -258785   

அர்ச்சகர் ஆலயத்திற்கு அருகிலே உள்ளார். எப்போதும் தரிசனம் செய்யலாம்.

புகைப்படங்கள்:









அனுமன் சன்னதி 


No comments:

Post a Comment