Sunday 23 October 2011

நேமம்

நேமம்...

தேவார வைப்பு தலங்களில் ஒன்று நேமம். வைப்புத்தலம் என்றால்? திருமுறைகளில் தனிப்பாடல் பெறாமல் பிற தலங்களின் பாடல்களில் குறிப்பிட படுவது வைப்புத்தலங்கள். 

இருப்பிடம்

நேமம் திருக்காட்டுபள்ளி - தோகூர் - கல்லணை சாலையில் உள்ளது. திருக்காட்டுப்பள்ளியில் இருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. சாலையின் ஓரத்தில் கோயில் உள்ளது. சாலை நல்ல தார் சாலை. காவிரி கரையில் 
தான் ஆலயம் உள்ளது. 


இறைவன் பெயர்: ஐராவதேஸ்வரர்
இறைவி பெயர் : அலங்காரி
தீர்த்தம் : சுதா கூபம் 

தல அமைப்பு:

சிறிய ஆலயம். சுவாமி கிழக்கு பார்த்தும் அம்பாள் தெற்கு பார்த்தும் உள்ளனர். இரண்டு அம்பாள் சன்னதிகள். இரண்டு அம்பாளுக்கும் ஒரே பெயர்.அம்பாள் சிலை திருட்டு போனதால் புதிய சிலை செய்யப்பட்டது. பின்பு பழைய சிலையும் கிடைத்ததால் இரண்டு சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

நந்தி ஒரு பள்ளத்தில் நந்தி மண்டபத்தில் உள்ளார். மழை பெய்ய வேண்டும் என்றால் நந்தி உள்ள பள்ளத்தை நீரால் நிரப்புவர். 

மேலும் பிரகாரத்தில் லக்ஷ்மி நாராயண பெருமாள் மற்றும் சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. 

தல வரலாறு

விருத்திராசுரனை கொன்ற பாவத்தை இந்திரன் இங்கு வந்து தீர்த்து கொண்டான். நாரதரால் சபிக்க பட்ட ரம்பை இங்கே உள்ள பாரிஜாத வனமாகிய நேமதிற்கு வந்து வழி பட்டாள்.ரம்பயை அழைத்து வர 
இந்திரன் ஐராவதம் என்ற யானையை அனுப்பினான்.யானையை 
கண்ட ரம்பை சிவலிங்கத்தை தழுவி கொண்டாள்.ஐராவதம் தன் துதிக்கையால் ரம்பையை இழுத்தது. மேலும் சிவலிங்கத்தை 
பெயர்த்து எடுக்க முயற்சி செய்து மூர்ச்சை அடைந்தது.

இந்திரன் சிவபெருமானை வேண்டி பாப விமோசனம் அளிக்க 
வேண்டினான்.இறைவன் ஐராவதம் மற்றும் ரம்பை ஆகியோருக்கு 
சாப விமோசனம் அளித்தார். அன்று முதல் இறைவனின் பெயர் 
ஐராவதேஸ்வரர். இந்த ஊரை சுற்றி உள்ள பலரின் பெயர் ஐராவதம் 
என்று உள்ளது. (தொல் பொருள் ஆய்வாளர் திரு. ஐராவதம் மகாதேவன் 
இந்த பகுதியை சேர்ந்தவர்.)

ஆலய நேரம்: 

காலை: 10 -11 .30  மாலை: 06 .௦௦ - 07 .௦௦

ஆலய அர்ச்சகர் எண்: கிரிதரன் : 9943756059 

அங்கே எடுத்த புகைப்படங்கள்:










அலங்காரி அம்பாள்:


அலங்காரி அம்பாள்:


ஐராவதேஸ்வரர்: 






1 comment: